nagulambikai.com

Thevarams & Bhajans

Sthothrams/ஸ்தோத்திரங்கள்

Ganapathy Sthothram

Vakra thunda maha kaya

Soorya kodi samapraba

Nir vignam guruve theva

Sarva karyesu sarvatha

Om shreem gam ganapathaye namaha (x3)

 

Guru Sthothram

Gurur Brahma Gurur Vishnu Gurur Devo Maheshwaraha

Guru Saakshaat ParaBrahma Tasmai Sri Gurave Namaha

Gayatri Sthothram (x 3)

Om Burbhuva Svaha

Tat Savitur Varenyam

Bhargo Devasya Dhimahi

Dhiyo yo nah Prachodyat

கணபதி  ஸ்தோத்ரம்

வக்ர துண்ட மஹா கயா           

சூர்ய கோடி சமப்ரப

நிர் விக்னம் குருவே தேவா

சர்வ கர்யேசு சர்வதா

ஓம் ஸ் ரீம் கம் கணபதயே நமஹ (x3)

 

குரு  ஸ்தோத்ரம்

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வர

குரு ஸ்சாஷாத் பரப்பிரம்ம தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ

 

காயத்ரீ  ஸ்தோத்ரம் (x 3)

ஓம் பூர் புவஸ் வஹ

தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோ நா ப்ரசோதயாத்

Thevarums/தேவாரங்கள்

Ainthu karaththanai aanai muhaththanai

Aianthin illampirai pohlum yeitrranai

Nanthi mahan thanai gnaanak kolundhanai

Punthiyil vaituthadi potru gindreney

Thodudaiya seviyan vidai yeyrior thooven mathi soodi Kaadudaiya sudalaip podi pusiyen ullam kavar kalvan Eadudaiya malaraan uunai nadpaninth thetha arul seitha Peedudaiya piramaapura meviya pemmaan ivan anreh.

– Thirugnanasambanthar

Maniramavathu  neeru, Vanavar  Melathu Neeru  ,

Sundaram aavathu  neeru , thuthikka paduvathu neeru,

Thanndiram  Avathu  neeru, Samayathil ullathu  neeru

Senthuvar  vaay umai   pangan  thiru Aalavayan  Thiru neere.

– Thirugnanasambanthar

ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை

புந்தியில் வைத்து அடி போற்று கின்றேனே

 

தோடுடைய செவியின் விடை ஏறி ஓர் தூவெண் மதிசூடிக்

காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்து ஏத்த அருள் செய்து

பீடுடைய பிரமாபுரமே விய பெம்மான் இவனன்றே

–   திருஞான சம்பந்தர் 

மந்திர மாவது நீறு, வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு, துதிக்கப் படுவது நீறு

தந்திர மாவது நீறு, சமயத்தில் உள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன், திருஆல வாயான் திருநீறே

 

திருஞான சம்பந்தர்

Thiruthandavum/திருத்தாண்டவம்

Salam poovodu thupam maranthariyaen

Thamilodu isai paadal maranthariyaen

Nalantheengilu munnai maranthariyaen

Unnaamam ennavir maranthariyaen

Ulanthaar thalayil pali kondulhalvaai

Udalul luru soolai thavir tharulvaai

Alanthaen adiyaen athikai kedila

Veerattana thurai ammaaneh

– Thirunaavukkarasar

 

Sotrunai vaethiyan sohthi vaanavan

Potrunai thirunthadi porunthak kaitholhak

Katrunaip poothiyohr kadalit paichinum

Natrunai yaavathu namachivaayaveh.

– Thirunaavukkarasar

 

Piththaa pirai soodi perumaane arulalaa..

Eththaan maravaathae ninaikindraen manthu unnai

Vaiththaip pennaith thennpaal vennainallur arul thuraiyul

Arthaa unnaku aalaayini allaen enalanaen                                         

– Sundramoorthy Nayanar

                                                                       

Ponnaar maeniyanae pulittholai araikkisaithu

Minnaar senchadaimael milirkontrai aninthavanae

Mannae maamaniye mazhapaadiyul maanikkamae

Annae unnaiyallal iniyaarai ninaikkaenae.                                         

– Sundramoorthy Nayanar

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன், தமிழோடிசை பாடல் மறந்தறியேன்

நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன், உன்னாமம் என்னாவின் மறந்தறியேன்

உலர்ந்தார் தலையிற் பலிகொண்டுழல்வாய், உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்

அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில, வீரட்டானத் துறை அம்மானே.

–   திருநாவுக்கரசர்

 

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணைத திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமச்சி வாயவே.

–   திருநாவுக்கரசர்

 

பித்தா பிறை சூடி பெரு மானே அருளாளா

எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை

வைத்தாய்ப் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்

அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

–   சுந்தரமூர்த்தி நாயனார்

 

 

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உண்ணையல்லால் இனி யாரை நினைக்கேனே.

–   சுந்தரமூர்த்தி நாயனார்

Poosuvathum venniru onnoathuvum ponggaravan

Paesevathum thiru-vaayal marai pohlum kaanedi

Poosuvathuvum  pesuvathum poonpathuvum kondennai

Esan avan evvikum iyal paanan saa-la-loh

Matru patrenak kindri nin thirup

Paathamae manam paavith-thaen

Petralum piranth-thaen inip

Piravaatha thanmai vanth theithinaen

Katravar tholuzhu thaethum seerkarai

Yoorit paandik kodumudi

Natravaa unai naan marakkinum

Sollum naa Namashivayava

– Sundramoorthy Nayanar

Mutthi nerri yariyaadha muurkkaroadu muyalvaenai

Paththi neerri ariviththu palzha vinaihal paarum vannam

Chiththamamalam aruviththu sivamaakki enaiyaanda

Aththan enakkaruliyavaar aar perruvaar achchoavae.

– Manikavasagar

பூசுவதும் வெள் நீறு, பூண்பதுவும் பொங்கு அரவம்,

பேசுவதும் திருவாயால் மறை போலும்? காண், ஏடீ!

பூசுவதும், பேசுவதும், பூண்பதுவும், கொண்டு என்னை?

ஈசன் அவன் எவ் உயிர்க்கும் இயல்பு ஆனான்; சாழலோ!

 

மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப் பாதமே மனம் பாவித்தேன்

பெற்றலும் பிறந்தேன் இனிப்பிற வாத தன்மை வந்தெய்தினேன்

கற்றவர் தொழு தேத்துஞம் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி

நற்றவா உனை நாம் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

–   சுந்தரமூர்த்தி நாயனார்

 

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்

பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்

சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட

அத்தனெனக் கருளியவார் யார் பெறுவார் அச்சோவே.

–   மாணிக்கவாசகர்

Thirupugzhal/திருப்புகழ்

Bakthiyaal yaanunnaip palakaalum

Patriyeh maathirup pugalpaadi

Muththanaa maarenaip peruvaalvin,

Mukthiyeh servathat karulvaayeh Uththama thaanasat kunar neiyaa,

Oppilaa maamanik kirivaasaa Viththagaa gnaanasat thinipaatha,

Vetri velayuthap perumaale.

-Arunagiri Nathar

 

Erumayil Erivilai aadum mugam onre
eesanudan nyaanamoli pesum mugam onre
koorum adiyaargal vinai theerkkum mugam onre
kunruruva vel vaangi ninra mugam onre

maaru padu soorarai vathaitha mugam onre
valliyai manam punara vantha mugam onre
aarumugam aanaporul nee arula vendum
aathi arunaasalam amarntha perumaale.

-Arunagiri Nathar

பத்தியால் யானுனைப் பலகாலும்

      பற்றியே மாதிருப் புகழ்பாடி

முத்தனா மாறெனைப் பெறுவாழ்வின்

     முத்தியே சேர்வதற் கருள்வாயே

உத்தமா தானசற் குணர்நேயா

      ஒப்பில்லா மாமனிக் கிரிவாசா

வித்தகா ஞானசத் தினிபாதா

     வெற்றி வேலாயுதப் பெருமாளே.         

–   அருணகிரிநாதர்

ஏறுமயில் ஏறிவிளை யாடுமுகம் ஒன்றே

ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே

கூறும் அடியார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே

குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே

 

மாறுபடு சூரரை வதைத்தமுகம் ஒன்றே

வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே

ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்

ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே.         

–   அருணகிரிநாதர்

Sivapuranum/திருவாசகச் சிறப்பு

Thiruvasaga Sirappu

Thollai irum piravi soolum thalai neeki

Allal aruththu aanantham aakiathey

Ellai maruva neri yalikkum vathavoor enkon

Thiruvasagam ennum thane.

தொல்லை இரும்பிறவி சூழுந்தனை நீக்கி,

அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே: எல்லை

மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்

திருவாசகம் என்னுந் தேன்.

Sivapuranum/சிவபுராணம்

Namachivaya vazhlga – Nathan thaal vazhalga

Imaippoluthum en nencil – Neengathan thaal vazhlga

Kokali aanda – Kurumanithan thaal vazhlga

Akamam aaki nindru – Annipan thaal vazhlga

Ekan Anekan- Iraivan adi vazhlga

 

Vekam keduth thaanda – Venthan adi velga

Pirapparukum pinjakan then – Peykalalkal velga

Puraththarkuch seyon then – Poongalakal velga

Karanguvivar ul magilung – Koan kalalkal velga

Siranguvivar ornguvikkum – Seerohn kalal velga

Eesan adi pottri – Enthai adi potri

Thesan adi pottri – Sivansevadi pottri

Neythe nindra – Nimalan adi pottri

Maya Pirapparukkum – Manan adi pottri

Seerar peruthurai nam – Thevan adi pottri

 

Aarathan inpam – Arulum malai pottri

Sivan avan en sinthaiyul – Nintra athanaal

Avan arulale – Avan thaal vananki

Sinthai Mahilach – Sivapuranam Thannai

Munthai vinai muluthum – Oya uraippan yan

 

Kan nuthalaan than karunai – Kann kaatta vantheithi

Ennuthatku edda – elilar kazhi iranchi

Vinnirinthu mannirainthu – Mikai vilangoliyai

Ennairan thellai – ilathaney nin peruncheer

Polla vinaiyane – Pugalumaru onrrariyane

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் என்நெஞ்சில், நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க!

ஆகமம் ஆகிநின்று, அண்ணிப்பான் தாள் வாழ்க!

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!

 

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க

புறந்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க

கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க

சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்கழல் வெல்க

 

ஈசன்அடிபோற்றி எந்தை அடிபோற்றி

தேசன் அடிபோற்றி சிவன் சேவடிபோற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி

சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி

 

ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி

சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால்

அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்

சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை

முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் 

 

கண்னுதலான் தன்கருணை கண்காட்ட வந்தெய்தி

எண்ணுதற்கு எட்டா எழில்லார் கழல் இறைஞ்சி

விண்நிறைந்து மண்நிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்

எண்இறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர்

பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்

Pull aahi poodai – Puluvai maramaahi

Pal virugum aahi – Paravayai pampaki

Kallai manitharai – Peiya kanangalai

Valasurar aahi – Munivarai thevarai

Sella ninra ith – Thavara sangamathul

 

Ellappirappum – Piranth ilaithaen emperumaan

Meiye unn ponnadigal – Kandu intru veedutaen

Uya enn ullathul – Omgaramai ninra

Meiya vimala – Vidaippaga vethangal

Aiyaa en ongi – Azhlnthu akandra nunnianae

 

Veyai thaniyai – Iyamaana naam vimala

Poyayina ellam – Poyagala Vantharuli

Meyjnanam aahi – Milir kindra meichudaray

Enjnanam illathaen – Inpap perumaney

Anjnanam thannai – Akalvikum nal arivey

 

Aakam alavu irithi – illai anaithulakum

Aakuvai kaapai – Alippai arul tharuvai

Porkkuvai ennai – Pukuvippai nin thozhlumpin

Naattrathin neriai – Seyai naniane

Matram manam kalian intra marayoney

 

Karantha paal kannalodu – Nei kalanthat pola

Siranthadiyar sinthanaiyul – Thenoori nintru

Pirantha pirapparukkum – Engal- perumaan

Nirangal ore eyenthu –udayai – Vinnorgal  eththa

Marainthirunthai emperuman – Valvinai yaen thannei

 

Marainthida Moodia – Maya irulai

Arampaavam ennum – Arung kaitral kattip

Purantholporthu engum – Puzhlu aluku moodi

Malam sorum onpathu – Vayil kudilai

Malankap pulan eyenthum – Vanjanaiyai seya

 

Vilanku manath thaal – Vimala unaku

Kalantha anpakik – Kasinthu ul urugum

Nalanthaan ilatha – Siriyetku nalki

Nilanthan mael vantharuli – Nee kalzhalkal kaati

Nayit kadaiyaik – Kidantha adiyetkuth

 

Thaayit sirantha – Thayavana thatthuvaneh

Maasata sothy – Malarntha malarsudareh

Thesaneh thaenar – Amuthey sivapuraneh

Pasamaam pattraruthup – Paarikum aariyaneh

Nesa arul purinthu – Nenchil vanchang kedap

பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்

 

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேஉன் பொன் அடிகள் கண்டு இன்று வீடுற்றேன்

உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

 

வெய்யாய் தணியாய் இயமான நம் விமலா

பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி

மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே

 

ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழுப்பின்

நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே

 

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த

மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை

 

மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப் 

புறந்தோல்போர்த்து எங்கும் புழுவழுக்கு மூடி

மலஞ்சோரும் ஒன்பது வாயில் குடிலை

மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய

 

விலங்கு மனத்தால், விமலா உனக்கு

கலந்த அன்பு ஆகிக் கசிந்துள் உருகும்

நலன்தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேன்னார் அமுதே சிவபுரனே

பாசமாம் பற்றுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள் புரிந்து நெஞ்சில்வஞ்சங் கெடப்

Perathu ninra – Perung karunaip peraray

Aara amuthey – Alavilaap pemmaneh

Orathar ullathul – olikkum oliyaney

Neerai uriken – aaruyirai ninraneh

Inpamum thunpamum – illaneh ullaneh

 

Anparuku anpaneh – Yavaiyumam allayumaam

Sothiyaaneh thun iruleh – thonraap perumayaneh

Athianeh antham – Naduvaki allaneh

Eerthennai artkonda – Enthai perumaaneh

Koortha menjnathaal – Kondunarvar thangkaruthin

 

Nokaria nokeh – Nunukaria nunnunarveh

Pokum varavum – Punarvum ilap punnianeh

Kakum em kavalaneh – Kaanparia per oliye

Aattrinpa vellameh – Aththamickai ninra

Thottach sudar oliyai – Sollatha nunnu narvai

 

Maatamaam vyakanthin – Vevereh vantharivaam

Thetaneh thetath – Theliveh en sinthanaiyul

Oottrana unnar – Ammmuthey udaiyaneh

Vetru vigara – Vidakudampin udkidappa

Aatren em aya – Aranehyoh enrenru

Portrip pugalnthirunthu – Poi kettu meyanar

Meedingu vanthu – Vinaippiravi saarameh

Kallap pula kurambai – Kaddalika vallaneh

Nal irulil naddam – Pyinradum naathaneh

Thillayul koothaneh – Thenpandi naattaneh

 

Allal piravi –Aruppaaneh oh enru

Sollatku ariaanai – Solli thiruvadikeel

Sollia paattin – Porul unarnthu solluvar

Selvar sivapurathin – Ullar Sivan adikeel

Pallorum – Ethappaninthu

பேராது நின்ற பெருங்கருணைப் பேர் ஆறே

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத்துள் ஒளிக்கும் ஒளியானே

நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 

 

அன்பருக்கு அன்பனே யாவையுமாம் அல்லையுமாம்

சோதியனே துன் இருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகிஅல்லானே

ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்தமெய்ஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின் 

 

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்உணர்வே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே

காக்கும் எம் காவலனே காண்பரிய பேர்ஒளியே

ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற

தோற்றச் சுடர்ஒளியாய்ச் சொல்லாத நுண்உணர்வாய் 

 

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்

தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்

ஊற்றான உண்ணார் அமுதே உடையானே

வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப

ஆற்றேன்எம் ஐயா! அரனேயோ! என்றென்று

 

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்

மீட்டுஇங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக்குடம்பைக் கட்டழிக்க வல்லானே

நள்இருளில் நட்டம் பயின்றாடும் நாதனே

தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

 

அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்று

சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக் கீழ்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின், உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து.

Bhajans/பஜனை பாடல்கள்

Pilayar Pilayar

Pillayar, pillayar perumai vaintha pillayar (x2)

Aatrankkarai meethelay arasa marathin nillaliae

Veetuirukum pillayar vinaihal theerkum pillayar

Yaanai mugam kondavar ainthu karangal udaiyavar

Paanai vayaru padaithavar pakthar kurraihal theerpavar

Manchalilae seiyinum manninalae seiyinum

Aintheluthu manthirathaii nenchil nattum pillayar

Om nama sivaya endra aintheluthu manithirathai nenchil naatum pillayar

Om nama sivaya shivaya nama om

Om nama shivaya endra aintheluthu manthirathai nenchil naatum pillayar

Arumugar Velanukku annanana pillaiyar

Nerum thunbam yavaiyum nikki vaikkum pillaiyar

– Pillaiyar

Kaliyugathin vinthaiyai kaaneh vendhi anuthinamum

Yeliyin meethi yeriye ishtam pola suthuvar

Jay Ganesha Jay Ganesha Jay Ganesha pahimam, Sri Ganesha Sri Ganesha Sri Ganesha raksham

Vel Muruga

Vel Muruga, Vel Muruga

Vel Muruga, Vadivel Azhaga                                                 Vel Muruga

Kanda, Kadamba, Vel Muruga                             x 2

Kathirkama Vela, Vel Muruga                              x 2            Vel Muruga

Soorasamhara, Vel Muruga                                  x 2

Subramanya, Vel Muruga                                      x 2            Vel Muruga

Amma thaaye aandarulvaai

Amma thaaye aandarulvaai

Devi Bhagavathi arul purivaai                                               Amma

Vendum varam nee thandiduvaai                     x 2

Ariyaa kuzhandaiyaam ennai nee kaappai     x 2            Amma

Neeye Gauri Bhavani Shankari                            x 2                          

Raja Rajeshwari Thiripura Sundari                      x 2            Amma

பிள்ளையார்  பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

ஆற்றங்கரை மீதிலே அரசமரத்து நிழலிலே

வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

யானை முகம் கொண்டவர் ஐந்து கரங்கள் உடையவர்

பானை வயிறு படைத்தவர் பக்தர் குறைத் தீர்ப்பவர்

மஞ்சளிலே செய்யினும் மண்ணினாலே செய்யினும்

ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்

ஓம் நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை

நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்

ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார்

நேரும் துன்பம் யாவையும் நீக்கி வைக்கும் பிள்ளையார்

பிள்ளையார்

கலியுகத்ததின் விந்தையை காணவேண்டி அனுதினம்

எலியின் மீது ஏறியே இஷ்டம் போல சுற்றுவார்.

ஜெய கணேச ஜெய கணேச ஜெய கணேச பாஹிமாம்

ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ரக்ஷமாம் 

வேல்  முருகா

வேல் முருகா வேல் முருகா

வேல் முருகா வடிவேல் அழகா                                 வேல் முருகா

கந்தா கடம்பா வேல் முருகா                    x 2

கதிர்காம வேலா வேல் முருகா               x 2            வேல் முருகா

சூரசம்ஹாரா வேல்முருகா                        x 2

சுப்ரமணியனே வேல்முருகா                   x 2            வேல் முருகா

 

அம்மா தாயே ஆண்டருள்வாய்

அம்மா தாயே ஆண்டருள்வாய்

தேவி பகவதி அருள்புரிவாய்                                     அம்மா

வேண்டும் வரம் நீ தந்திடுவாய்              x 2

அரியாக்குழந்தையாம் என்னை நீ காப்பை                x 2          அம்மா

நீயே கௌரி பவானி சங்கரி                    x 2                          

ராஜ ராஜேஸ்வரி திரிபுர சுந்திரி           x 2            அம்மா

Kannan engal Kannan aam

Kannan engal Kannan aam,
Kaarmega vannan aam
Vennai unda Kannan aam,
Mannai unda Kannan aam

Kuzhalinaale maadugal,
Kooda seidha Kannan aam
Koottamaaga gopiyar,
Kooda aadum Kannan aam

Malaikku nalla kudai yena,
Malai piditha Kannan aam
Nachchu paambin meedhile,
Nadanam aadum Kannan aam

Kodumai mikka Kamsanai
Kondru vendra Kannan aam
Thoothu sendru Paandavar thuyaram
Theertha Kannan aam

Kannan

Pullaanguzhal kodutha moongilgale

Pullaanguzhal kodutha moongilgale
Engal Purushothaman pugazh paadungalen
Vandaadum Gangai malar thottangale
Engal Madhusoodhanan pugazh paadungalen         

Panneer malar soriyum megangale
Engal Parandhaaman meyyazhagai paadungalen
Then kodi thendral tharum raagangale
Engal Sri Krishnamoorthi pugazh paadungalen
Engal Sri Krishnamoorthi pugazh paadungalen

  Pullaanguzhal

Guruvayoor thannil avan thavazhgindravan
Oru kodiyodu Mathuraavai aalgindravan
Thiruvengadathil avan arulgindravan
Andha Srirangathil palli kolgindravan
Andha Srirangathil palli kolgindravan

Paanchaali pugazh kaakka than kai koduthaan
Andha Bhaaratha por mudikka sangu eduthaan
Paandavarkku urimaiyulla pangai koduthaan
Naam padippatharku Geethai ennum paadam koduthaan
Naam padippatharku Geethai ennum paadam koduthaan

Pullaanguzhal

கண்ணன்  எங்கள்  கண்ணனாம்

கண்ணன் எங்கள் கண்ணனாம்,

கார்மேக வண்ணனாம்

வெண்ணெய் உண்ட கண்ணனாம்,

மண்ணை உண்ட கண்ணனாம்

குழலினாலே மாடுகள்,

கூடச் செய்த கண்ணனாம்

கூட்டமாகக் கோபியர்,

கூட ஆடும் கண்ணனாம்

மலைக்கு நல்ல குடையென,

மலைபிடித்த கண்ணனாம்

நச்சுப்பாம்பின் மீதிலே

நடனம் ஆடும் கண்ணனாம்

கொடுமை மிக்க கம்சனைக்

கொன்று வென்ற கண்ணனாம்

தூது சென்று பாண்டவர் துயரம்

தீர்த்த கண்ணனாம்

கண்ணன்

புல்லாங்குழல்  கொடுத்த  மூங்கில்களே

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்

வண்டாடும் கங்கைமலர் தோட்டங்களே

எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்                 

பன்னீர் மலர்சொரியும் மேகங்களே

எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களேன்

தென் கோடி தென்றல் தரும் ராகங்களே

எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்

எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்    புல்லாங்குழல்

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்

ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்

திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்

அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்

அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்         

பாஞ்சாலி புகழ்காக்க தன் கை கொடுத்தான்

அந்தப் பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்

பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான்

நாம் படிப்பதற்கு கீதை என்னும் பாடம் கொடுத்தான்

நாம் படிப்பதற்கு கீதை என்னும் பாடம் கொடுத்தான்        புல்லாங்குழல்

Maha Mrityunya Mantra

Om Tryambakam Yajaamahe

Sugandhim Pushtivardhanam

Urvaaru Kamiva Bandhanaath

Mrityor Mukshiya Maamridhaath (x9)

Om Shanti Shanti Shanti-hee!

JOTHI VAZHIPADU

Jothi Jothi Jothi Suyem

Jothi Jothi Jothi Param

Jothi Jothi Jothi Arul

Jothi Jothi Jothi Sivam

Vama Jothi Soma Jothi

Vana Jothi Gnana Jothi

Maha Jothi Yoha Jothi

Vatha Jothi Natha Jothi

Ema Jothi Viyoma Jothi

Eru Jothi Veeru Jothi

Eka Jothi Eka Jothi

Eka Jothi Eka Jothi

Athy Neethy Vetahney

Adal Needu Pathaney

Vathy Jnana Pothaney

Vahlga Vahlga Nathaney

Jothi Jothi Jothi Suyem

Jothi Jothi Jothi Param

Jothi Jothi Jothi Arul

Jothi Jothi Jothi Sivam

– Ramalinga Swamigal

Vaazhthozhi

Then naadu udaiya Sivane potri

En naattavarkkum iraiyaa potri

Chit Sabhesaa

Siva Chidambaram

Inbame soozhga! Ellorum vaazhga!! ×3

Om Shaanthi! Shaanthi! Shaanthi!

மஹா மிருத்யுஞ்ஞய மந்திரம்

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே

சுகந்திம் புஷ்டிவர்த்தனம்

உர்வாரு கமிவ பந்தனாத் 

ம்ருத்யோர் முக் ஷிய மாம்ருதாத் (x9)

 

ஓம்! சாந்தி! சாந்தி! சாந்திஹி!

ஜோதி வழிபாடு

ஜோதி ஜோதி ஜோதி சுயம்

ஜோதி ஜோதி ஜோதி பரம்

ஜோதி ஜோதி ஜோதி அருள்

ஜோதி ஜோதி ஜோதி சிவம்

 

வாம ஜோதி சோம ஜோதி

வான ஜோதி ஞான ஜோதி

மாக ஜோதி யோக ஜோதி

வாத ஜோதி நாத ஜோதி

 

ஏம ஜோதி வியோம ஜோதி

ஏறு ஜோதி வீறு ஜோதி

ஏக ஜோதி ஏக ஜோதி

ஏக ஜோதி ஏக ஜோதி

 

ஆதி நீதி வேதனே

ஆடல் நீடு பாதனே

வாதி ஞான போதனே

வாழ்க வாழ்க நாதனே

 

ஜோதி ஜோதி ஜோதி சுயம்

ஜோதி ஜோதி ஜோதி பரம்

ஜோதி ஜோதி ஜோதி அருள்

ஜோதி ஜோதி ஜோதி சிவம்

வாழ்த்தோழி

தென் நாடு உடைய சிவனே போற்றி

எந் நாட்டவர்க்கும் இறையா போற்றி

 

சிற்சபேசா

சிவ சிதம்பரம்

 

இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!! (x3)

 

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!